×

ரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர திமுக வலியுறுத்தல்!

சென்னை பெரம்பூர் குக் சாலை பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் ஸ்டீபன் ரஷ்யாவின் ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவருடன் முகமது ஆஷிக், ராமு விக்னேஷ் மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோரும் படித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களக்கு முன்னர் ஸ்டீபன் வோல்கா நதிக்கரைக்கு சென்ற போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற மற்ற 4 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரின் உடலும் கரை
 

சென்னை பெரம்பூர் குக் சாலை பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் ஸ்டீபன் ரஷ்யாவின் ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவருடன் முகமது ஆஷிக், ராமு விக்னேஷ் மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோரும் படித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களக்கு முன்னர் ஸ்டீபன் வோல்கா நதிக்கரைக்கு சென்ற போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற மற்ற 4 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரின் உடலும் கரை ஒதுங்கிய நிலையில் ரஷ்ய போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரஷ்யாவில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் தமிழகம் கொண்டு வர இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இது குறித்து நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஷ்யாவில் மாணவர்கள் உயிரிழந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் உயிரிழந்த ஸ்டீபன், முகமது ஆஷிக், ராமு விக்னேஷ் மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேரின் உடல்களையும் அரசு தமிழகத்துக்கு கொண்டு வர நடவடியாகி எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.