“டம்மி முதல்வர்னு விமர்சித்தேன் அதுக்கு நடவடிக்கை இல்லை... தண்ணீர் வரவில்லை எனக் கூறியதால் கைது”- உதயநிதி ஸ்டாலின்
திமுகவின் Most wanted அணி என்றால் அது சட்டத்துறைதான் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில், பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தஞ்சாவூரில் விவசாய விரோத தவெக அரசை கண்டித்து, திமுக சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக என்னைக் கைது செய்ய முயற்சித்தினர். ஆர்ப்பாட்டத்தில் என்ன பேசினேன் யோசித்தேன், “டம்மி முதலமைச்சர் எனக் கூறினேன் அதை ஒப்புக்கொண்டார்கள். கேடுகெட்ட, வெட்கங்கெட்ட அரசு எனக்கூறினேன். இதற்கெல்லாம் எந்த ரியாக்சனும் இல்லை. ஆனால், காவிரியில் தண்ணீர் வரவில்லை எனக் கூறியதால் நடவடிக்கை எடுத்தனர். என்னை போலீசார் கைது செய்ய வந்தபோது பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன்.. த.வெ.க அரசை விமர்சித்ததற்காக கைது என நினைத்தேன். மிசா, எமர்ஜென்சியை பார்த்தது திமுக என அவர்களுக்கு தெரியாது. எந்த துறைக்கு யார் அமைச்சர் என்பதே தவெகவில் யாருக்கும் தெரியாது. திமுகவினரை தினமும் கைது செய்வதை டைம் டேபிள் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு. தன்னை கைது செய்தது மிகப்பெரிய நகைச்சுவை.
கோவையில் கொல்லப்பட்ட அமுதன் குறித்து பேரவையில் பேசத் தொடங்கியபோது அதை கோஷ்டி பூசல் என்றார் கல்வித் துறை அமைச்சர். 10 பேருக்கும் 10 பேருக்கும் இடையே நடந்தால், அது கோஷ்டி பூசல். 10 பேருக்கும் ஒருவருக்கும் இடையே நடந்தால் அது கொலை. ஃசோபா மாடல் தவெக அரசுக்கு, நம் கழகத்தைப் பற்றியோ, கழக சட்டத்துறையின் வரலாற்றைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கைதின் போதெல்லாம், கழகத்திற்கு நெருக்கடி வந்த காலத்தில் அதனை உடைத்து நொறுக்கியது கழக சட்டத்துறைதான். Time Table போட்டு கைது நடவடிக்கைகளை எடுத்து வர்றாங்க.. தவெக ஆட்சிக்கு வந்த பின் வழக்கறிஞர்கள் தான் ரொம்ப Busy-ஆ இருக்காங்க” என்றார்.