☰
×

"சகோதரி கார்த்திகாவை விடுவிக்க வேண்டும்"- உதயநிதி 

 

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமிகு. கார்த்திகாவை த.வெ.க. அரசு கைது செய்திருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை…

— Udhay (@Udhaystalin) October 20, 2026


அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம். இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.