×

“மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா?”- உதயநிதி

 

மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?  என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்? 

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே…

— Udhay (@Udhaystalin) August 14, 2026


ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது. இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.