சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறதா தவெக அரசு?- உதயநிதி ஸ்டாலின்
தவெக ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லை எனக்கூறும் தவெக அரசு, MLA-க்களுக்கு கார் வழங்குவதாக அறிவித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தவெக ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லை எனக்கூறும் தவெக அரசு, MLA-க்களுக்கு கார் வழங்குவதாக அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கேட்டால், முந்தைய ஆட்சியினர் கஜானாவை காலியாக விட்டுச்சென்றதாக கூறுகின்றனர். இவர்கள் சர்க்கார் நடத்துறாங்களா? இல்லை சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறதா தவெக அரசு? மக்கள், விவசாயிகள் பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு சட்டமன்றத்தில் பதில் இல்லை.. எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க மட்டும் தவெக அரசிடம் நிதி இருக்கிறதா? ட்தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வறட்சி நிவாரணம் கேட்ட விவசாயிகளுக்கு இதுவரை தவெக அரசு பதில் கூறியதா? திமுக கேட்கும் எந்த கேள்விக்கும் பேரவையில் முதல்வர் எழுந்து பதில் சொல்லுவது கிடையாது. விவசாயிகளுக்கு கொடுக்க நிதி இல்லை எனக் கூறிய தவெக அரசுக்கு எம்.எல்.ஏக்களுக்கு கார் வாங்க மட்டும் நிதி இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.