☰
×

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கான ஆதரவு மறுபரிசீலனை?- உதயநிதி விளக்கம்

 

மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் முடிவுகளை ஒருபோதும் தி.மு.க. எடுக்காது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை, டாக்டர் பெசன்ட் சாலை, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து முனையம் மற்றும் நேரக் காப்பாளர் அறையை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்வது குறித்து மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.

காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வருவது பற்றி எனக்கு தெரியாது. வருகிறார்களா? வரட்டும் வந்து பார்க்கட்டும்.  தமிழ்நாட்டின் நலனை திமுக என்றும் விட்டு கொடுக்காது. தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுக வலியுறுத்திய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுக்கும் முடிவை செயல்படுத்துவோம். இதுகுறித்து மட்டுமல்ல, முதலமைச்சர் விஜய் எதற்காவது வாய் திறந்து பேசியிருக்கிறாரா? எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, அதை சரியாக திமுக தலைவர் எடுப்பார்" என்றார்.