×

“நான் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை; என்னை அப்படி வளர்க்கவில்லை”- உதயநிதி ஸ்டாலின்

 

நான் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை, எனக்கு அப்படி ஒரு எண்ணம் துளியும் கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவல்துறை விசாரணைக்கு பிறகு, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நான் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை, எனக்கு அப்படி ஒரு எண்ணம் துளியும் கிடையாது,  என்னை என் தாய் தந்தையர் அப்படி வளர்க்கவில்லை. எனக்கு திருமணமாகி ஒரு மனைவி இருக்கிறார், அவருடன் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்களை எனது தாயாகவும், தங்கையாகவும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு, விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களை பட்டியலிட்டு, மேட்டூர் அணை திறக்கப்பட்டாததை சுட்டிக்காட்டி பேசியதற்கெல்லாம் பதில் சொல்ல வக்கில்லாதவர்தான் நமக்கு வாய்த்திருக்கிற டம்மி முதலமைச்சர்.  தீவிரவாதி போல் என்னை அழைத்துச் சென்றனர். பிரச்சனையை திசை திருப்புகிறார்கள். காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காதது குறித்து முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயத்தை பற்றியே பேசினேன். ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் யுக்தியை பின்பற்றுகிறது தவெக அரசு” என்றார்.