×

"விஜயிடம் என்றைக்காவது கேள்வி கேட்டிருக்கிறீர்களா?"- உதயநிதி ஸ்டாலின்

 

அரசு நடத்துறீங்களா? இல்லை கண்காட்சி நடத்துறீங்களா? என்ற விஜயின் கேள்வியை கேட்ட பத்திரிக்கையாளரிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்றைக்காவது அவரை கேள்வி கேட்டிருக்கீங்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

திருச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கவர்மெண்ட் நடத்துகிறீங்களா, கண்காட்சி நடத்துகிறீர்களா என்ற விஜயின் கருத்து குறித்த கேள்விக்கு, என்றைக்காவது இதுபோல் அவரிடம் கேட்பீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு தடவை அவரை பேசவிடுங்க... என்றார். திமுக இளைஞர் அணி அடுத்த கட்டம் மாநாடு எப்பொழுது நடைபெறும் என்ற கேள்விக்கு, திமுக இளைஞரணி  நிர்வாகிகள் அடுத்தக்கட்ட சந்திப்பு குறித்து தலைவர் அவர்கள் முடிவு செய்வார் எனக் கூறினார்.