“முதல்வர் விஜய்க்கு கடல பாத்தாதான் மூடு வரும்”- உதயநிதி ஸ்டாலின் ஆபாச பேச்சு
சட்ட சபையிலிருந்து கடலை பாக்கணுமாம்... முதல்வர் விஜய்க்கு கடல பாத்தாதான் மூடு வரும், மூடுனா வேல பாக்குற மூட சொல்றபா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசினார்.
தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டபோது பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, “திமுக.. திமுக.. என்று முதலமைச்சர் விஜய் பேசுகிறார்.. நாங்கள் கூட அவ்வளவு பேசமாட்டோம். கடந்த 2 வருசமா அதையேத்தான் பேசிட்டு இருக்காரு தேய்ஞ்சி போன டேப் ரெக்கார்டர் மாதிரி.. கஜானா காலி என்று சொல்லிவிட்டு ரூ.1200 கோடி செலவில் Beach Facing சட்டமன்றம் வேண்டும்னு ஜோசியக்காரன் சொல்லியிருப்பான். சட்ட சபையிலிருந்து கடலை பாக்கணுமாம்... முதல்வர் விஜய்க்கு கடல பாத்தாதான் மூடு வரும், மூடுனா வேல பாக்குற மூட சொல்றபா... பொட்டி பாமாவை ஜெயிக்க வெச்சீங்கன்னா சட்டமன்றத்துல போய் பாட்டு பாடுவாங்க.
திமுக தயவில் தான் தவெக ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். கலைஞரின் பேரனாக கேட்கிறேன் திமுகவுக்கு வாக்களியுங்கள். ஒரு எம்.எல்.ஏ. வேலை இல்லை என்கிறார், ஒரு எம்.எல்.ஏ. கார் இல்லை என்கிறார், ஒரு எம்.எல்.ஏ.வோ காதல் தோல்வி என்கிறார் எம்.எல்.ஏ. காதல் தோல்வி எனப் பேசியவுடன், இதற்கெல்லாமா முதல்வர் திட்டம் வைத்திருக்கிறார் என்று நான் நினைத்தேன்” என பேசினார்.