“அடிமை கூட்டத்தையும் சங்கி கூட்டத்தையும் தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது”- உதயநிதி ஸ்டாலின்
தலைவர் டாக்டர் கலைஞர் 13 தேர்தலையும் தோல்வியை சந்திக்காமல் வெற்றிக்கு அடித்தளமிட்டது குளித்தலை தொகுதி. அடிமை கூட்டத்தையும், சங்கை கூட்டத்தையும் தமிழ்நாட்டில் நுழைய விட கூடாது எனக்கூறி நீங்கள் ஒவ்வொருவரும் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கிருஷ்ணராயபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்தில் கிருஷ்ணாராயபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் சி.கே.ராஜா, குளித்தலை தொகுதி வேட்பாளர் சூரியனூர்.சந்திரன், இரு வேட்பாளர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கிருஷ்ணராயபுரம் தாலுகா ஆபீசிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் வெள்ளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார வாகனத்தில் நின்று கை அசைத்தப்படி வந்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “இரண்டு வேட்பாளருக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தலைவர் கலைஞரின் வெற்றி பயணம் துவங்கியது கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில். தான் சந்தித்த 13 தேர்தல்களிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றிக்கு அடித்தளம் இட்ட தொகுதி குளித்தலை தொகுதி. எடப்பாடியார், சசிகலா காலில் விழுந்த போட்டோவை காமித்து கேவலமான போட்டோ. நாடு முழுவதும் பரவி உள்ளது. தலைவர் முக ஸ்டாலின் கடந்த 2021 தேர்தலில் நடித்த வாக்குறுதிகள் மகளிர் விடியல் பயணம், 1.3 கோடி குடும்ப அட்டைதார பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை யாக 1000 ரூபாய் வழங்குதல், துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் தாயுமானவர் திட்டத்தில் நிறைவேற்றி திறம்பட செயல்படுத்தி வந்துள்ளார்.
மீண்டும் திராவிட மாடல் அரசு 2.0 அமையும் போது மகளிர் உரிமை தொகையை 2000 ஆக உயர்த்தி வழங்குதல், அடுத்த ஐந்து வருடங்களில் 35 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்குதல், குடும்ப அட்டைதாரப் பெண்களுக்கு எலக்ட்ரானிக் சாதன பொருட்கள் வாங்குவதற்காக ரூபாய் 8000 கூப்பன், காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தினை நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரம் உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட தான் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் உனது உறவினர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து கடந்த ஐந்து ஆண்டுகள் செய்த திட்டங்கள், மீண்டும் வந்து செய்யும் திட்டங்களை கூறி பிரச்சாரம் செய்து இந்த இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இரண்டு வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். மிக முக்கியமானது அடிமை கூட்டத்தையும் சங்கி கூட்டத்தையும் தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது” என்று கூறினார்.