×

“10 தோல்வி பழனிசாமியை 11 தோல்வி பழனிசாமியாக்கி வீட்டில் உட்கார வையுங்கள்”- உதயநிதி ஸ்டாலின்

 

10 தோல்வி பழனிச்சாமியை 11 தோல்வி பழனிச்சாமியாக ஆக்கி வீட்டில் உட்கார வையுங்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


            

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் ஆகிய நான்கு மூன்று தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விசிக வேட்பாளரான சக்திவேலை ஆதரித்து பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தேனி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் நம்முடைய திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வெற்றி பெறப்போவது உறுதி.2018 ஆம் ஆண்டு முதன் முதலில் தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டத்தில் நான் பேசியது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் அப்படிப்பட்ட தேனி மாவட்டத்திற்கு வந்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக என்றைக்கும் ஓடோடி உழைக்கக்கூடியவர் சக்திவேல் அவரை நீங்கள் வெற்றி பெற வைத்தால் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கான உழைப்பை அவர் நிச்சயம் கொடுப்பார். இந்த முறை சட்டமன்றத் தேர்தல் அவருடைய குரல் எதிரொலிக்க வேண்டும் என்றால் இங்க இருக்கக்கூடிய நீங்க அத்தனை பேரும் பானை சின்னத்தில் வாக்களித்து சக்திவேல் அவர்களை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைங்கயுங்கள். இந்த பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த திட்டங்களை பட்டியலிட்டு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க பானை சின்னத்தில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம், கல்லூரி படிக்கிற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டதோடு தேர்தல் அறிக்கையில் கொடுத்த 8000 ரூபாய் கூப்பன் திட்டம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை பட்டியலிட்டார். திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வெற்றியை பெறப்போவது உறுதி அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பெரியகுளம் தொகுதியில் அண்ணன் சக்திவேல் அவர்களுக்கு பானை சின்னத்தில் நீங்க வாக்களித்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வச்சு சட்டமன்றத்துக்கு அனுப்ப செய்வீங்களா? என கூடியிருந்த வாக்காளர்களிடம் கேட்டார். இந்த சட்டமன்றத் தேர்தல் டெல்லி அணியா தமிழ்நாடு அணியா? இன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்ததால் அதனால் தமிழகத்தில் எத்தனை எம்பிக்கள் குறைக்கப்படுவார்கள் என்பதை எடுத்துக் கூறினார்.மேலும் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு திட்டங்கள் ஏதும் கொடுக்க மறுப்பதோடு ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி நம்பர் ஒன் முரட்டு அடிமைன்னு ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டுள்ளார் வரும் தேர்தலில் தோல்வி அடைந்து 11 தோல்வி பழனிச்சாமியாக அவர் வீட்டில் உட்கார போகிறார். உங்க வீட்டுப் பிள்ளையாக கேட்கிறேன், தலைவருடைய மகனாக, கலைஞருடைய பேரனாக கேட்கிறேன் பானை சின்னத்தில் வாக்களித்து சக்திவேல் அவர்களை அதிகமான வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்றத்துக்கு அனுப்புங்க உங்க தொகுதிக்கு என்ன தேவையோ அதை நிச்சயம் அவர் நிச்சய செயல்படுத்துவார் என உரையாற்றினார்.