“எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் இருப்பதுதான் என் அனுபவம்”- உதயநிதி ஸ்டாலின்
எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் இருப்பதுதான் என் அனுபவம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆம்பூர் திமுக வேட்பாளர் வில்வநாதனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “எடப்பாடி பழனிசாமியை விட எனக்கு அரசியல் அனுபவம் குறைவுதான். ஆனால் எந்த உருட்டல், மிரட்டல்களுக்கும் பயப்படாத அனுபவம் என்னுடையது. சங்கிகளிடம் பயப்படாத அனுபவம் என்னுடையது. எப்போதும் சுயமரியாதையோடு இருப்பது என்னுடைய அனுபவம்... ஆனா அவரோட அனுபவம் என்ன? ஜெயலலிதா, சசிகலா, மோடி, அமித்ஷா கால்களில் விழுந்தது அவரோட அனுபவம். தமிழ்நாட்டு உரிமைகளை டெல்லியில் அடகு வைத்தது அவரோட அனுபவம். மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
ஒரே மாதத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கி உள்ளோம். ஒரே மாதத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அரசு, திராவிட மாடல் அரசுதான். சுயமரியாதை மண்ணான தமிழ்நாட்டில் திராவிடமாடல் 2.O ஆட்சி அமைய அயராது உழைப்போம்.எனது வெற்றியை விட, திமுக வேட்பாளர்களின் வெற்றி மிக மிக முக்கியம், திமுக வேட்பாளர்களை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.