“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்”- விஜய்க்கு உதயநிதி பதிலடி
பதிலுரையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், சினிமா camera என்று நினைத்துக் கொண்டு குட்டிக்கதை சொன்னதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “பதிலுரையின்போது எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின்பேரில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை கொச்சைப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் விஜய். பதிலுரையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், சினிமா camera என்று நினைத்துக் கொண்டு குட்டிக்கதை சொன்னார். செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். சட்டமன்றத்தை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டார்கள். சட்டமன்றத்தை ஒரு புனிதமான மக்கள் அவையாக நடத்தாமல், ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிக் காட்டியிருக்கிறார் முதல்வர். டயலாக்கை மனப்பாடம் செய்துவிட்டு போவதுபோல் அனைத்தையும் ஒப்பித்துவிட்டு சென்றுள்ளார்.ரீல்ஸை மனதில் வைத்தே முதல்வர் விஜய்க்கு ஸ்கிரிப்ட் தரப்படுகிறது. சபாநாயகர் எங்களைப் பேச அனுமதிக்கவில்லை. மக்கள் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்காமல், முன் கூட்டியே எழுதப்பட்ட சினிமா பஞ்ச் வசனங்களையும் குட்டிக்கதைகளையும் முதல்வர் பேசி வருகிறார். பார்ட்டி ஃபண்ட் என்று சொல்லக்கூடிய முதலமைச்சர் எந்த பார்ட்டிக்கு பண்ட் சென்றுள்ளது என்ற ஆதாரத்தை சொல்ல வேண்டும்” என்றார்.
-