×

குறைந்தபட்ச நன்றியோ நாகரீகமோ இல்ல... காங்கிரசை விமர்சித்த உதயநிதி

 

குறைந்தபட்ச நன்றியோ நாகரீகமோ இல்லாத காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் நாம் நம்பக் கூடாது என  எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,  “20 வருடத்திற்கு மேல் நம்முடைய முதுகு மேல் ஏறி நின்று சவாரி செய்த காங்கிரஸ் நம்முடைய முதுகில் குத்திவிட்டு சென்றுள்ளது. இதை யாரும் மறந்து விடாதீர்கள். பாஜகவுடைய தொடர் வெற்றிக்கு மோடியும், அமித்ஷாவும்தான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், காங்கிரஸ் கட்சிதான் பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்பது இப்போது தெரிகிறது. அப்படிப்பட்ட காங்கிரஸை தன்னுடைய தோளில் தூக்கி கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் சுமந்தது நம்முடைய தலைவர்தான். மதச்சார்பின்மையைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டில் பாஜகவை நுழைய விடக் கூடாது என்று நாம் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிப் பெற வைத்து வருகிறோம். களத்திலேயே இல்லாத காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் ஜெயிக்க திமுகதான் காரணம். நம்முடைய தலைவர் முதல்வராக வேண்டுமென்று மக்கள் போட்ட ஓட்டில் ஜெயித்துவிட்டு பதவிக்காக சொல்லாமல் ஓடி விட்டார்கள். குறைந்தபட்ச நன்றியோ நாகரீகமோ இல்லாத காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் நாம் நம்பக் கூடாது. எந்த காலத்திலும் கிட்ட சேர்க்கக் கூடாது” எனக் கூறினார்