“ஹெலிகாப்டர் ஷாட்களை ரசிகர்கள் இழப்பார்கள்” - உதயநிதி ஸ்டாலின்
அழகான நினைவுகளுக்கும் அற்புதமான தருணங்களுக்கும் நன்றி. தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக சென்னைக்கு தோனி மீது எப்போதும் ஒரு தனி அன்பு இருக்கும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "ஐபிஎல் சகாப்தத்தில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு எண்ணற்ற மறக்க முடியாத நினைவுகளை வழங்கிய தோனி இப்போது களத்திலிருந்து விலகுகிறார். நீங்கள் கொடுத்த அழகான நினைவுகளுக்கும் அற்புதமான தருணங்களுக்கும் நன்றி. தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக சென்னைக்கு உங்கள் மீது எப்போதும் ஒரு தனி அன்பு இருக்கும். சிஎஸ்கே ரசிகர்கள், உங்களுடைய புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட்கள், அபாரமான ஸ்டம்பிங்குகள், சிறப்பான கேப்டன்சி மற்றும் கடினமான சூழ்நிலைகளை மறக்க முடியாத வெற்றிகளாக மாற்றிய உங்களது நிதானம் ஆகியவற்றை நிச்சயம் இழப்பார்கள். சிஎஸ்கே-யின் வழிகாட்டியாகப் புதிய பொறுப்பை ஏற்கும் இவ்வேளையில், தோனிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.