×

“சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு அடிப்பார்” உதயநிதி ஸ்டாலின்

கொரோனாவை விட மோசமான ஆட்சி எடப்பாடி ஆட்சி என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிதம்பரத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘நான் திருவாரூரில் தான் எனது பிரச்சாரத்தை தொடங்கினேன். திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தின் வாசலில் கைதுசெய்யப்பட்டேன். எடப்பாடி அரசு எனக்கு அத்தனை பெரிய விளம்பரத்தைத் தேடித் தந்துள்ளது. கலைஞரின் வீட்டு வாசலில் நான் கைது செய்யப்பட்டேன் என்பதை அறிந்துகொள்ள கலைஞர் உயிரோடு
 

கொரோனாவை விட மோசமான ஆட்சி எடப்பாடி ஆட்சி என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சிதம்பரத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘நான் திருவாரூரில் தான் எனது பிரச்சாரத்தை தொடங்கினேன்.

திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தின் வாசலில் கைதுசெய்யப்பட்டேன். எடப்பாடி அரசு எனக்கு அத்தனை பெரிய விளம்பரத்தைத் தேடித் தந்துள்ளது. கலைஞரின் வீட்டு வாசலில் நான் கைது செய்யப்பட்டேன் என்பதை அறிந்துகொள்ள கலைஞர் உயிரோடு இல்லை; அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். நான் பிரச்சாரத்தில் பங்கேற்கும் இடங்களில் கூட்டம் கூடுகிறது. அதனால் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை;பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என போலீசார் கேட்டுக் கொண்டனர். அதன்படி நான் உள்ளரங்க கூட்டங்களாக நிகழ்ச்சிகளை மாற்றி கொண்டு உள்ளேன்.

எடப்பாடி அரசு ஊழல் மிகுந்த அரசாக உள்ளது. அவரின் சம்பந்தி தான் எல்லா கான்டிராக்டுகளையும் எடுக்கிறார்.கொரோனாவை விட மோசமான ஆட்சியாக எடப்பாடி அரசு இருக்கிறது. அதனால்தான் இந்த ஆட்சியைப் பார்த்து பயந்து ஓடும் அவல நிலை கொரோனாவுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள். அவர்கள் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு விளைவிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்க மாட்டார்கள். சசிகலா விடுதலையாகி வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு அடிப்பார். நீங்கள் தேர்தலில் அவர்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும். தற்போதுள்ள அதிமுக, பாஜக, ஜெயலலிதா ,சசிகலா என மூன்று பேருக்குமே உண்மையாக இல்லை.

ஜெயலலிதா எப்படி இறந்தார்? அவருக்கு என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் தெரியவில்லை. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் ,சட்னி சாப்பிட்டார் என்று எல்லோரும் கூறினார்கள். ஒரு நாள் ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று கூறினார்கள். அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் பின்னர் வெளியே வந்து ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்றார். மீண்டும் அவர்கள் இணைந்து கொண்டதால் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையத்திற்கு வரவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அந்த மோடியா இந்த லேடியா என குரல் எழுப்பினார். ஒட்டுமொத்தமாக இன்றைக்கு அதிமுக, பாஜகவிடம் எல்லாவற்றையும் அடகு வைத்து விட்டனர். கேடுகெட்ட ஆட்சியை அகற்ற வேண்டும். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்து விட்டார்கள். அதனால்தான் பாஜக தலைவர் முருகன் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தான் அறிவிப்போம் என்று கூறி வருகிறார். இதை விட கேவலம் அதிமுகவுக்கு வேறு எதுவும் இல்லை” என்றார்.