“பதவி,பொறுப்பிற்காக யார் காலிலும் விழும் அனுபவம் எனக்கு கிடையாது”- உதயநிதி
நெல்லை பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் அப்துல் வகாப்வை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பிரச்சார மேற்கொண்டார்.
அப்பொழுது அவரை வரவேற்கும் விதமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் உள்ளிட்டோரின் உருவங்களில் நடன கலைஞர்கள் வேடமிட்டு நடனமாடி அங்கிருந்த தொண்டர்கள் நிர்வாகிகளை மகிழ்வித்தனர். அதனைத் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.கலைஞரின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி.நெல்லைக்கு எப்ப வந்தாலும் தனி உற்சாகம் வரும்.இந்திக்கு எதிராக போராடி கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார்.80 சட்டமன்ற தொகுதிகளுக்கு இதுவரை சென்று மக்களை சந்தித்திருக்கிறேன்.பாளையங்கோட்டை தொகுதியில் வெற்றி உறுதி.கடந்த முறை 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 75,000 வாக்குகள் வித்தியாசங்கள் வெற்றி பெற வேண்டும்.எப்போதுமே மக்களோடு மக்களாக இருக்கும் இயக்கம் நம்முடைய திமுக. அப்துல் வஹாப் 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செய்திருக்கிறார். அந்த உரிமையில் தான் ஓட்டு கேட்டு வந்திருக்கிறோம்.
தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த பாஜக அதிமுகவினர் திட்டம் போட்டனர். திட்டத்தை நிறுத்த திட்டம் போடுகிறீர்களா நாங்கள் ஐயாயிரத்தை தருகிறோம் என்று முதலமைச்சர் கொடுத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கலைஞர் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?. வெற்றி பெறுவது யார்?. தமிழ்நாடு அணிக்கு கேப்டன் முதலமைச்சர் ஸ்டாலின். டெல்லி அணிக்கு கேப்டன் பிரதமர் மோடி. தொகுதி மறுவரையறை என்று கூறுகிறார்கள், அதற்கும் நம்முடைய தலைவர் தான் எதிர்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார். பதவிக்காக,பொறுப்பிற்காக யார் காலிலும் விழும் அனுபவம் எனக்கு கிடையாது. அடுத்த 8 நாட்கள் ஒவ்வொரு வீடு வீடாக செல்லுங்கள். அடிமை கூட்டத்தையும் சங்கி கூட்டத்தையும் தமிழ்நாட்டிற்கு விட்டுவிட்டால் அவர்கள் பின்னோக்கி இழுத்துச் சென்று விடுவார்கள்” என்று கூறினார்.