☰
×

"சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி.."- உதயநிதி விமர்சனம் 

 

ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM?…

— Udhay (@Udhaystalin) November 20, 2026


இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.