நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்..!
Nov 28, 2025, 07:25 IST
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை பாராளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.