நாளை முதல் 22 வரை வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..!
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் மனு அளித்தவர்களை திமுக தலைவர் மாவட்ட வாரியாக அழைத்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்து, தொகுதி நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து ஆராய இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, மார்ச் 17ம் தேதி காலை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.
மார்ச் 18ஆம் தேதி காலை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெற உள்ளது.
18ஆம் தேதி மாலை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட வேட்பாளர்ளின் நேர்காணல் நடைபெற உள்ளது.
மார்ச் 19ஆம் தேதி காலை, கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மத்திய மற்றும் தெற்கு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.
மார்ச் 19ஆம் தேதி மாலை, கிருஷ்ணகிரி, திருப்பூர் வடக்கு மற்றும் கிழக்கு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ளது.
மார்ச் 20ஆம் தேதி காலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ளது.
மார்ச் 20ம் தேதி மாலை,தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ளது.
மார்ச் 21ஆம் தேதி காலை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கான நேர்காணலும், அன்றைய தினம் மாலை, புதுக்கோட்டை, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணலும் நடைபெற உள்ளது.
மார்ச் 22ஆம் தேதி காலை, கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணலும், அன்றைய தினம் மாலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் வடக்கு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணலுக்கு குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்டுள்ள மாவட்டங்களின் மாவட்ட செயலாளர் மட்டுமே வர வேண்டும்; வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது' என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.