கோவையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்படும் அரசு கல்லூரிகளை எதிர்த்து பேசி ஏழை, எளிய, சாமானிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க துடிக்கும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்து சமய அறநிலை துறை நிதியில் கல்லூரி நடத்துவதற்கு எதிராகவும், இதில் சதி செயல் நடப்பதாகவும் குற்றம் சாட்டி பேசி இருந்தார். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் பாஜக, ஆர்எஸ்எஸ் முகமாக எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றியதாக பலரும் விமர்சித்து வந்தனர். தமிழ்நாடு மாணவர்களுக்கான கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 2500 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசாங்கம் தர மறுப்பதற்கு பழனிச்சாமி குரல் எழுப்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை மீட்க கல்வி உரிமையை பாதுகாக்க திமுக மாணவர் அணி சார்பாக கோவை சிவானந்த காலனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்றது இதில் திரளாக பங்கேற்ற திமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜகவுக்கு எதிராக நுழையினர் தொடர்ந்து உரையாற்றிய அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியின் அடிமைத்தனத்தையும் ஒன்றிய அரசாங்கத்தின் அடக்கு முறையையும் பட்டியலிட்டு விமர்சித்து கடுமையாக முழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி, நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பல தி.மு.க அணியினர் கலந்து கொண்டனர். ராஜீவ் காந்தி தலைமையில் பங்கேற்ற தி.மு.க வினர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.