☰
×

"'முருகனுக்கு அரோகரா' சொல்றதுக்கு பதிலா 'முதல்வருக்கு அரோகரா'னு சொல்றாங்க.."- சேகர்பாபு 

 

திருச்செந்தூரில் தெருக்கூத்தாடிகளை எல்லாம் அழைத்துச் சென்று முதல்வருக்கு அரோகரா, அறநிலைய அமைச்சருக்கு அரோகரா என்று கோஷமிடுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

புழலில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "திருச்செந்தூரில் தெருக்கூத்தாடிகளை எல்லாம் அழைத்துச் சென்று முதல்வருக்கு அரோகரா, அறநிலைய அமைச்சருக்கு அரோகரா என்று கோஷமிடுகிறார்கள். அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்கிறார்கள். இறைவனுக்கு நிகராக மனிதனை கொண்டாடி இருக்கிறார்கள். ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளன. இது பக்தர்களுக்காக நடைபெற்ற சூரசம்ஹாரம் அல்ல. ரீல்ஸ்க்காக மட்டுமே நடத்தப்பட்ட சூரசம்ஹாரம். த.வெ.க ஆட்சி கலப்பட ஆட்சி, அதுக்கு சூரசம்ஹாரமே சாட்சி. அமைச்சர் ரமேஷ்  சட்டை இல்லாமல் வெறும் உடம்போடுதான் வேல், சேவலை வாங்க வேண்டும். ஆனால் ஆகமங்கள் அதிகம் மீறப்பட்டுள்ளது.  

ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சி என்று சொன்ன திமுக ஆட்சி காலங்களில் ஆகமம் பின்பற்றப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முழுமையாக போற்றப்பட்டார்கள், மதிக்கப்பட்டார்கள். ஆனால் தவெக ஆட்சியிலோ, கடவுளே அவமதிக்கப்படுகிறார். தவெக ஆட்சி ஒரு கலப்பட ஆட்சி. அதற்கு நேற்று நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வே சாட்சி. கடந்த திராவிட மாடல் ஆட்சியில் புரட்டாசியில் வரும் பெருமாள் நிகழ்ச்சியாகட்டும், ஆடியில் வரும் அம்மன் நிகழ்ச்சியாகட்டும், மார்கழி மாத நிகழ்ச்சியாகட்டும் எங்குமே சமயங்களையும், ஆகம விதிகளையும் மீறவில்லை, முதலமைச்சர் புகழ் பாடவில்லை. இறைக் கடவுளின் புகழை தான் பாடினோம். ஆனால் தவெக ஆட்சியில் ஆகம விதிகள் பின்பற்றப்படவில்லை" என்றார்.