"3 ஃபைல்கள் நீ அவிழு நானும் அவிழ்க்குறேன்" - முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி
6 மாதம் போனதும் காட்பாடி மக்கள் வேறு வழி இன்றி துரைமுருகன் வீட்டில் வந்து நிற்பார்கள் என திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “விஜய் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரலாம் எனப் பேசுவது அவர்களின் எல்லை இல்லாத கற்பனை. கற்பனைக்கு எந்த எல்லையும் கிடையாது. அவர்கள் ஐ.நா. சபைக்கே தலைவராக வருவார் என்று கூட சொல்லிக் கொள்ளட்டும்.திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலக் கொள்கைக் குறிப்பில் தந்தை பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்கள் தவறாமல் இடம்பெறும். ஆனால், தவெக அரசு இவர்களின் பெயர்களைத் தவிர்த்து வருகிறது. பெரியார், அம்பேத்கர் படங்களை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். ஆனால், தொலைக்காட்சிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்க முயல்கின்றனர். ஊடகங்கள்தான் இதன் உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தமிழ்நாடு மக்களை இவர்களால் ஏமாற்ற முடியாது.
இன்றைக்குத் தெரியாது... இன்னும் 6 மாசம் ஆகட்டும். இதே மக்கள் வந்து துரைமுருகனுடைய வீட்டு வாசலிலே நின்று, 'காவல் தெய்வமே! நீங்கள் தான் எங்களைக்காப்பாற்ற வேண்டும்' என்று சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. பிகிலுக்கு ஓட்டுப் போட்டல... இப்ப திகில் திகில்னு விலை ஏறுது. என் மேஜை மீது 3 ஃபைல் உள்ளது எனக் கூறுகிறார். 3 ஃபைல்கள் நீ அவிழு நானும் அவிழ்க்குறேன். முதலமைச்சர் அறையில் இருந்து ஊழல் தொடங்கியுள்ளது. சிஏஜி ரிப்போர்ட் என்பது எப்போதுமேதமிழக அரசு பாராட்டியது அல்ல, விஜய் சொல்ற அந்த 3 பைல் சிஏஜி கொடுத்துள்ள பைல்கள்தான். இதேபோல்தான் ஜெயலலிதா என்கிட்ட வாலாட்டுச்சி. அதோடு விளைவு என்னனும் அனைவரும் பார்த்தார்கள். எந்த கொழுப்பு மட்டுமிருக்க கூடாது” என்றார்.