×

"திட்டங்களின் பெயரை மாற்றுவதால் திமுகவின் புகழ் மாறாது.. பெயரை மாற்றுவது முட்டாள்தானம்"- ஆர்.எஸ்.பாரதி

 

தவெக ஆட்சியில் எந்த புதிய திட்டங்களோ,அதற்கான யோசனைகளோ இல்லை.2 மாதகாலமாக ஒன்றும் புதிதாக செய்ய முடியாமல், திமுக ஆட்சியின் திட்டங்களின் பெயர்களை மாற்றுகின்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தவெக ஆட்சியில் எந்த புதிய திட்டங்களோ, அதற்கான யோசனைகளோ இல்லை. 2 மாதகாலமாக ஒன்றும் புதிதாக செய்ய முடியாமல், திமுக ஆட்சியின் திட்டங்களின் பெயர்களை மாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைந்தது முதல் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. விபத்து காரணமாக ஆட்சிக்கு வந்து விட்டார்கள் என்பதால், செய்வதறியாது திட்டங்களின் பெயர்களை மாற்றி வருகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. வெளிநாட்டில் கூட இந்தத் திட்டங்களை பின்பற்றினார்கள். திட்டங்களின் பெயரை மாற்றுவதால் அது மறைந்துவிடும் என்று கருதினால் அதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை. எங்களுக்கு காமராஜர் விரோதி இல்லை.. காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடும் குழந்தைகள் தளபதியின் பெயரைத்தான் சொல்கின்றனர்.

மக்கள் கிட்ட இருந்து பணத்தை திருடி EB நடத்துறாங்களா..? பில் அமௌண்ட் தப்பாயிடுச்சுன்னா திருப்பி கொடுக்க வேண்டியது தான..? கழிக்குறதுன்னா என்ன அர்த்தம்..? இது ஒரு மோசடி வேலை.. செந்தில் பாலாஜியை பழி வாங்கும் நோக்கில் அவர் மீது வழக்கு போடுகின்றனர். வழக்கு போடுவதால் யாரையும் அழித்துவிட முடியாது” என்றார்.