நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம் அற்பத்தனம்- ஆர்.எஸ்.பாரதி
நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றுவது, இந்த ஆட்சியின் அற்பத்தனத்தையே காட்டுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளையும், வேலை வாய்ப்புகளையும் வழங்கிவந்த நான் முதல்வன் திட்டம் தற்போது தவெக அரசில் 'திறன் தமிழ்நாடு' (TNSKILL CORPORATION) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் தொடர்பாக பதிவிட்ட பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றுவது, இந்த ஆட்சியின் அற்பத்தனத்தையே காட்டுகிறது. இதில் காட்டும் அவசரத்தை சட்டம், ஒழுங்கு, மின்வெட்டு போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால் நல்லது. சூரியனை எப்படி மறைக்க முடியாதோ, அதுபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களை மறக்க முடியாது” என்றார்.