×

“TVK ஒரு மேயர் சீட் ஜெயிச்சுட்டா ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்”-  ஆர்.எஸ்.பாரதி சவால் 

 

உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தவெக வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் என தவெகவுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.

TVK ஒரு மேயர் ஜெயித்தால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் -தவெகவிற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சவால் !#TVKVijay‌ #Dmk #Mayor #CMJosephVijay‌ #RSBharathi pic.twitter.com/SktsS3XM2s

— Top Tamil News (@toptamilnews) June 7, 2026


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “ஆறு மாதத்தில் முடிந்தால் உள்ளாட்சித் தேர்தலை வையுங்கள், ஒரு மேயர் இடத்திலாவது தவெக வெற்றி பெற்றால் நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன், இந்த சவாலை ஏற்க தவெக தயாரா..?ஸ்டாலின், உதயநிதிக்கு சவால் விடும் தகுதி ஆதவ் அர்ஜூனாவுக்கு இல்லை. முதல்வர் விஜய்க்கு ஆபத்து வருகிறது என்றால் அதற்கு காரணம் ஆதவ் அர்ஜூனாதான். இனி எந்த சூழலிலும் முதிகில் குத்திவிட்டு ஓடியர்களை சேர்க்கமாட்டோம். காங்கிரஸுடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. இனி கட்சி தொண்டர்களும் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காங்கிரஸ் இடம்பெற்றுள்ள எந்த கூட்டணியிலும் நாங்கள் இணைய மாட்டோம். திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என ப.சிதம்பரம் கூறியிருந்தாலும், நாங்கள் காங்கிரஸை டைவர்ஸ் பண்ணிவிட்டோம். சில கட்சிகள் எங்களை விட்டு சென்றாலும், எங்களோடு ஆலோசனை செய்துவிட்டு சென்றன. அது ஒரு வகையான டைவர்ஸ்... ஆனால் காங்கிரஸ் உடன் செய்துள்ள டைவர்ஸ் வேறு வகையானது” என்றார்.