200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஜெயிப்போம்- ஆர்.எஸ்.பாரதி
Apr 23, 2026, 20:05 IST
2024 ல் இருந்த அதே டிரெண்ட் தான் இப்போதும் உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “2024 இல் மக்களின் மனநிலை எப்படி இருந்ததோ அப்படித்தான் தற்போதும் மக்கள் மனநிலை உள்ளது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 0.06 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. 2024 எப்படி 40 இடங்களிலும் வென்றோமோ அதேபோல இந்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.