×

#BREAKING ''சென்னை சூப்பர் 6'' - வாக்குறுதிகளை வெளியிட்ட தி.மு.க

 

சென்னைக்கான திமுக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.


தி.மு.க.வின் சென்னைக்கான தேர்தல் அறிக்கை

  • சென்னையில் மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் காலமுறைப்படி விநியோகம் செய்யப்படும்.
  • அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
  • பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள், ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.
  • சென்னையில் மெட்ரோ விரிவாக்கப் பணிகள், மழைநீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.
  • சென்னையில் பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும்.
  • சென்னையில் AI, ANIMATION, VISUAL EFFECTS, GAMING, AND IMMERSIVE TECHNOLOGIES-க்கு சிறப்பு மையம் அமைக்கப்படும். 
  • ரூ.10,000 கோடி முதலீட்டில் 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் திட்டம்
  • சென்னையில் உலகளாவிய திறமைத் தளம் அமைக்கப்படும். 
  • ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு, அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள், நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கப்படும். விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.
  • நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
  • கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தர பண்பாட்டு மையம் அமைக்கப்படும்