×

“ஜெயலலிதா வீட்டு வாசலில் 4 நாட்கள் காத்திருந்து சுயமரியாதையை அடகுவைத்து யாசகம் பெற்றவர் விஜய்”

 

கொடநாடு பங்களா முன்னே நின்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தன்னுடைய திரைப்படம் திரையிடுவதற்காக யாசகம் பெற்றவர்தான் நடிகர் விஜய் என திமுக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி விமர்சித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கழக துணைப் பொதுச்செயலாளர், ஆ.இராசா தலைமையில் தி.மு.க மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் மாணவர் அணியை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கல்வி உரிமையை மீட்கச் சட்டப் போராட்டம் நடத்தும் முதல்வருக்கு உறுதுணையாக இருப்பது, பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த கழகத் முதலவருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்த், “எத்தனை பேரோடு கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டின் தலைவராக எடப்பாடியால் ஒருபோதும் மாற முடியாது. பாஜகவுக்கு நான் தான் அடிமை என்று கூப்பாட்டு போட்டு கொண்டு இருக்கிறார் எடப்பாடி.  எடப்பாடி ஒப்புதலோடு பல மக்கள் விரோதத் திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. சாதிய பெயரை ஒழிக்க காரணமாக இருந்தவர் தந்தை பெரியார், UPSC முதல்நிலைத் தேர்வில் பெரியாரின் பெயருக்குப் பின்னால் சாதியின் அடையாளம் திணிக்கப்பட்டிருப்பது அயோக்கியத்தனமானது.கோடநாடு முன்னே நின்று யாசகம் பெற்றவர்தான் நடிகர் விஜய், 4 நாள் காத்திருந்து வீட்டுக்கு வெளியே தன்னுடைய சுயமரியாதையை அடகு வைத்தவர் விஜய், தமிழ்நாட்டு மக்களுக்காக நம்முடைய முதல்வர் டெல்லி சென்றார், தமிழ்நாடு இன்று பல்வேறு துறையில் முன்னோடி மாநிலமாக திகழ காரணம் திமுக. ஆடத் தெரியாதவருக்கு மேடை கோனை போல் திமுக மக்கள் மன்றத்தில் வளர்ந்து வருவதற்கான வயிற்றெரிச்சலாக தாங்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்” என்றார்.