×

அமைச்சர் சரத்குமார் பதவி விலகக் கோரி திமுக போராட்டம்: சென்னையில் போலீசார் அதிரடி கைது!

 

தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் சரத் குமார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

ஆனால், இதற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியான திமுக, போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவித்தாகக் கூறி, அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. ஆனால், சென்னையில் நடக்கவிருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை.

இருப்பினும், தடையை மீறி, எழும்பூர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக திமுகவினர் திரண்டனர்.தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்திய போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாக திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.