×

“இல்லம் தேடி மதுவை கொண்டுவந்தவர் ஸ்டாலின்”- ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திமுகவினர் அலப்பறை

 

இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் விஜய் எனக் கூறுவதற்கு பதிலாக ஸ்டாலின் என திமுக பெண் நிர்வாகி ஆர்ப்பாட்டத்தில் கூறியதால் பரபரப்பு சலசலப்பு ஏற்பட்டது.

இல்லம் தேடி மதுவை கொண்டுவந்தவர் ஸ்டாலின்"🤣🤣🤣

அந்தம்மா போற போக்குல உண்மையை சொல்லிடுச்சு 🤣

இதான் டா நேரம் னு polimer வன்மத்த கக்கிட்டான் 🤣 pic.twitter.com/WA5i7imiO9

— Esther (@EstherRachelJ) September 12, 2026


முதலமைச்சர் விஜய் மு.க.ஸ்டாலினை இழிவுப்படுத்திவிட்டதாக கூறி மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில் தவெக அரசை கண்டித்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது திமுக பெண் நிர்வாகி குழம்பி பேசிய வீடியோ வைரலாகிவருகிறது. திமுக மகளிரணி மாவட்ட நிர்வாகி பவுசியா பானு பேசும் போது, பெண்களுக்கு பாடுகாப்புனு பேச ஆரம்பித்தார். பின்னர், “இல்லம் தேடி கல்வியை கொண்டுவந்தவர் முதல்வர்.. இன்றைக்கு இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின்.. சிஎம் சார் செய்த திட்டத்திற்கு விஜய் ஸ்டிக்கர் ஒட்டுகிறார். மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளை எடுத்து சொல்லி இந்த முறை மண்ணை கவ்வுவோம்” என்றார். உடனே பதறிப்போன திமுக நிர்வாகிகள் அவரது பேச்சை திருத்தி பேச வைத்தனர்.