தெறி படப்பாணியில் திமுகவினர் போராட்டம்
வந்தவாசியை தொடர்ந்து கள்ளக்குறிச்சியிலும் உருவ பொம்மையை கயிறு கட்டி பாலத்தில் தொங்க விட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளதாக சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட விசாரணை முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கூறப்படும் நிலையில், கட்சித் தலைமை அடுத்து என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அருள் விக்னேஷ் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கலாமா, விளக்கம் கேட்கலாமா என்பது குறித்து தலைமை தரப்பில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி,
வந்தவாசியை தொடர்ந்து கள்ளக்குறிச்சியிலும் உருவ பொம்மையை கயிறு கட்டி பாலத்தில் தொங்க விட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெறி படத்தில் பாலியல் குற்றவாளியை காவல் அதிகாரியாக நடித்த விஜய் பாலத்தில் கட்சி தொங்கவிடுவதை நினைவுபடுத்தும் விதமாக போராட்டம் நடத்தப்பட்டது.