×

“ஆ.ராசா வந்துள்ளார் கேட்டை திறங்கள்..” எ.வ.வேலு வீட்டின் முன் தி.மு.கவினர் அட்டகாசம்

 

"ஆ.ராசா வந்துள்ளார் கேட்டை திறங்கள்.." என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டின் முன் தி.மு.கவினர் சத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூரில் சாலையே அமைக்காமல் சாலை அமைத்ததாக கூறி ரூ.3.20 கோடி ஊழல் செய்துள்ளார் எ.வ.வேலு.  இதனால் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 10 பேர் மீது கூட்டுச்சதி, ஊழல் தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 13 இடங்களில் DVAC சோதனை நடத்திவருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைப்பெற்று வரும் நிலையில் அவரை சந்திக்க சென்றார் எம்பி ஆ.ராசா. கதவை யாரும் திறக்காததால் திமுக எம்பி ஆ.ராசா சிறிதுநேரம் வெளியே காத்திருந்தார். எம்பி வெளியே காத்திருக்கிறார் உடனே கதவை திறங்கள் என்று ஆ.ராசாவின் உதவியாளர் செக்யூரிட்டியிடம் கூறினார். சிறிது நேரத்தி்ற்கு பிறகு எ.வ.வே்ு இல்லத்திற்குள் ஆ.ராசாவை போலீசார் அனுமதித்தனர். கேட்டிற்கு வெளியே காத்திருந்த போது போலீசார் அனுமதி கொடுத்தவுடன் உள்ளே சென்றார்.