“திரிஷா புருஷனை கண்டிக்கிறோம்”- திருந்தாத திமுகவினர்
“கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் திரிஷா புருஷனை கண்டிக்கிறோம்” என திமுகவினர் போராட்டத்தின் போது கோஷம் எழுப்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி, ''ஜூலை மாதத்தில் 42 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்கணும், ஆனால் இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இது பற்றி இன்னைக்கு இருக்கக்கூடிய முதல்வர் வாய் திறந்து பேசுகிறாரா? பேச மறுக்கிறார். அவர் இருக்கக்கூடிய கவலை என்ன? திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம். என்ன பொய் கேஸ் போடலாம்'' என தெரிவித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், ''திரிஷா… திரிஷா...'' என கோஷம் எழுப்பினர். உடனே உதயநிதி, ''எங்க தண்ணீ வருகிறதோ இல்லை. அங்கே தண்ணீ வரணும், நான் காவிரியை சொன்னேன்'' என்றார். திரிஷா, திரிஷா என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய உடனே உதயநிதி இவ்வாறு பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் திரிஷா புருஷனை கண்டிக்கிறோம்
— Navin Chakaravarthy 🦇 (@navin_offl) August 4, 2026
அடேய் 😂🤣 pic.twitter.com/XPAFAjlLBF
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள், வாகன ஓட்டிகள், காவல்துறையினரையே அச்சுறுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுகவினர் திரிஷா புருஷனை கண்டிக்கின்றோம் என்று வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது திமுக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் எக்ஸ் தளத்தில் வைரலாகிவருகிறது.