☰
×

"அமைச்சர்கள் முதல் தவெக நிர்வாகிகள் வரை போதைப் பொருளில் சம்பந்தப்பட்டுள்ளனர்”- பரந்தாமன்

 

நாகை தவெக நிர்வாகி பூபாலனிடம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அரசு பேசவில்லை என சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், “நாகை துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிகாரப் பிடியில் இருப்பதால் தான், அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி ஒரு த.வெ.க நிர்வாகியால் இவ்வளவு பெரிய கடத்தலை இப்படித் துணிச்சலாகத் திட்டமிட முடிந்ததா? தவெக நிர்வாகிகள் போதைப்பொருள் விற்றதால் கிடைத்த பணம் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது. பூபாலன் மூலம் தவெகவினருக்கு இலவசமாக போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டது. நாகை தவெக நிர்வாகி பூபாலனிடம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அரசு பேசவில்லை. ஜாஃபர் சாதிக் தி.மு.க உறுப்பினரே இல்லை சார்... அவர் வந்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்... அவருக்கும் தி.மு.கவுக்கும் சம்மந்தமே இல்லை... என்றாவது தி.மு.க பிரமுகரை நாங்கள் காப்பாற்றியுள்ளோமா? பா.ஜ.கவில் எப்படி குற்றவாளிகள் தஞ்சம் புகுந்தார்களோ அதே போல தான் த.வெ.கவும்.. த.வெ.கவில் இருப்பவர்கள் எல்லாருமே குற்றவாளிகள் தான்.

மாநில அரசு மத்திய அரசுக்கு  துணை போகிறது. போதை பொருளுக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் செய்தி போட்டால் உங்களுடைய லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என ஆதவ் மிரட்டுகிறார். தமிழக வெற்றி கழகம் அரசியல் கூட்டமே அல்ல. அது ஒரு ரசிகர்களின் கூட்டம். அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை போதைப் பொருளில் சம்பந்தப்பட்டுள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.