“பழனி முருகன் கோயில் நிலம் பத்திரப்பதிவில் சதி! திட்டமிட்டு செய்யப்பட்ட Scam"- திமுக நிர்வாகி பரபரப்பு
பழனிக்குச் செல்பவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை போடுவது வழக்கம். ஆனால், இன்று பழனிக்கே 'மொட்டை' போட்டிருக்கிறது தவெக ஆட்சி என திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், “பழனிக்குச் செல்பவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை போடுவது வழக்கம். ஆனால், இன்று பழனிக்கே 'மொட்டை' போட்டிருக்கிறது தவெக ஆட்சி. முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட அந்த நிலப் பரிமாற்றத்தை ரத்து செய்தது நீதிமன்றம் மட்டுமே, இந்த தவெக அரசாங்கம் அல்ல. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்களை நள்ளிரவில் சென்று கைது செய்யும் காவல்துறை, தவறுதலாக நிலத்தை விற்றவர்களையும், வாங்கியவர்களையும் ஏன் இதுவரை கைது செய்யவில்லை? பழனி முருகன் கோயில் நிலம் பத்திரப்பதிவில் சதி நடந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பேசியவர்களை இரவோடு இரவாக கைது செய்த போலீசார், நிலத்தை விற்றவர்களை, வாங்கியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? விஜய்யின் முதுகுக்கு பின்னாலே புரையோடிப்போன ஊழல் நடந்துள்ளது. பழனிக்கு அருகே இருக்கும் சார் பதிவாளரை அழைக்காமல் சுமார் 67 கி.மீ. தொலைவில் உள்ளவரை அழைத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கே இருக்கும் அதிகாரிகள் எல்லாம் விடுமுறை எடுத்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் Chit Fund துணை சார்பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டன் கையெழுத்து போடுவார் என்றே அவரை வரவழைத்து திட்டமிட்டு செய்யப்பட்ட Scam இது. பழனி சார்பதிவாளர் ஏன் விடுமுறையில் சென்றார்? ஒரே ஒரு நாள் டூட்டிக்கு வந்த பதிவாளர் அவசர அவசரமாக ரூ.100 கோடி நிலத்தை பதிவு செய்தது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.