×

அரசு ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கிய திமுக ஊராட்சித் தலைவர்

 

ஈரோடு மாவட்டம் பூந்துறைசேமூரில் மணிகண்டன் என்ற அரசு ஊழியரை, விடியா திமுக ஊராட்சித் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஈரோடு மாவட்டம் பூந்துறைசேமூரில் மணிகண்டன் என்ற அரசு ஊழியரை, விடியா திமுக ஊராட்சித் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கண்டனத்திற்குரியது. மக்கள் புகாரளித்தால், மிரட்டலும், பொய்வழக்கும், தாக்குதலும் மட்டுமே பதிலாகக் கொண்டிருந்த திமுகவினர், இப்போது ஒருபடி மேலே சென்று குடிநீர் வழங்கவில்லை என்று புகாரளித்ததற்கு துப்பாக்கி முனையில் மிரட்டத் துணிந்திருப்பது, விடியா திமுக ஆட்சியில் திமுகவினரால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடுத்த பரிணாமத்தை எட்டியுள்ளதையே காட்டுகிறது.