வேட்பாளராக தேர்வு செய்த ஸ்டாலினுக்கும், எனக்கு வாக்களித்தவர்களுக்கும் நன்றி- ஓபிஎஸ்
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்து மகத்தான வாய்ப்பு அளித்து, என்னை ஆதரித்து தேர்தல் பரப்புரை ஆற்றிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்து மகத்தான வாய்ப்பு அளித்து, என்னை ஆதரித்து தேர்தல் பரப்புரை ஆற்றிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான் வெற்றி பெற உறுதுணையாக இருந்து, தேர்தல் பரப்புரை ஆற்றி, உற்சாகம் ஊட்டிய கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், கழக துணைப் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.திருச்சி சிவா அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.கி.வீரமணி அவர்களுக்கும், தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்களுக்கும், களத்தில் அயராது உழைத்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், நமது கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைதளப் போராளிகள், தன்னார்வலர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் எனக்கு வாக்களித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்!
தமிழ்நாடு வெல்லும்!
நாம் வெல்வோம் ஒன்றாக!” எனக் குறிப்பிட்டுள்ளார்.