ஓபிஎஸ் வீட்டு கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னம் வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றம்
ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அகற்றப்பட்ட இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி கலர் அழிக்கப்பட்டது.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர், ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்ட ஆதரவாளர்களும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில் அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது இல்லத்தின் நுழைவாயில் கதவில் பொருத்தப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் அகற்றப்பட்டதோடு அவரது வீட்டில் இருந்த அதிமுக கலர் வண்ணமும் அகற்றப்பட்டு திமுக கலர் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் பெரியகுளம் பகுதியில் பயன்படுத்தப்படும் கார்களிலும் இருந்த ஜெயலலிதா படம் அகற்றப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படம் பொருத்தப்பட்டுள்ளது.