உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?- கனிமொழி
தமிழ்நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜி.எஸ்.டி. மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது தி.மு.க.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 6, 2026
ஆனால், கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5% குறைந்துள்ளது.…
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “ஜி.எஸ்.டி. மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது தி.மு.க. ஆனால், கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5% குறைந்துள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் அன்றாடத் தேவைகளுக்குக்கூட செலவழிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வாங்கும் சக்தி குறைந்து, மக்களின் நுகர்வு குறைவதன் தாக்கம்தான் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வசூல் சரிவிலும் வெளிப்படுகிறது. நாடு முழுவதும் சில பொருட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பைத் தன்னுடைய சாதனையாக தவெக அரசு மார்தட்டிக்கொள்வது அபத்தமானது. தமிழ்நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.