×

“ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டும்”- கனிமொழி

 

இந்தியாவின் தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து எழுந்துள்ள இந்தக் கேள்விகள் மிகவும் தீவிரமானவை என தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், கடந்த 10 மாதங்களில் வாக்காளர்களைச் சேர்த்தல், பெயர்களை நீக்குதல், மீண்டும் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவுகளைக் கையாளுதல் தொடர்பான முடிவுகளுக்கு குறைந்தது 14 முறை  எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக இன்றைய 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.  குறிப்பாக, அவர்களுக்கு தெரியாமலேயே பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து எழுந்துள்ள இந்தக் கேள்விகள் மிகவும் கவலைகளை எழுப்பியுள்ளன.

இந்தியத் தேர்தல்களின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகும் நிலையில், இதிலிருந்து பா.ஜ.க அரசு தன்னைத் தானே காத்துக்கொள்ள முடியாது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் சேர்க்கப்படுகிறது, யாருடைய பெயர் நீக்கப்படுகிறது, வாக்காளர்களின் தரவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஒன்றிய அரசுத் தேர்தல் ஆணையமும் மக்களுக்கு தெளிவான பதில்களை அளிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.