உதயநிதியை பழிவாங்க வேண்டுமென்றால் வழக்கு தொடுக்கட்டும்- கனிமொழி
எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி, ''ஜூலை மாதத்தில் 42 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்கணும், ஆனால் இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இது பற்றி இன்னைக்கு இருக்கக்கூடிய முதல்வர் வாய் திறந்து பேசுகிறாரா? பேச மறுக்கிறார். அவர் இருக்கக்கூடிய கவலை என்ன? திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம். என்ன பொய் கேஸ் போடலாம்'' என தெரிவித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், ''திரிஷா… திரிஷா...'' என கோஷம் எழுப்பினர். உடனே உதயநிதி, ''எங்க தண்ணீ வருகிறதோ இல்லை. அங்கே தண்ணீ வரணும், நான் காவிரியை சொன்னேன்'' என்றார். திரிஷா, திரிஷா என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய உடனே உதயநிதி இவ்வாறு பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 4, 2026
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது…
இந்நிலையில் உதயநிதி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி எம்பி, “எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.