‘தனிமனித ஒழுக்கம்’ குறித்த அறிவுரையை விஜய் முதலில் தனது கட்சியினருக்கு சொல்ல வேண்டும்- கனிமொழி
சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப்படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சில தினங்களுக்கு முன், திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர்…
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 12, 2026
இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சில தினங்களுக்கு முன், திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் குற்றவாளிகளை காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப்படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.