×

வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காக இருக்கும் - கனிமொழி

 

தூத்துக்குடியில் அமையவுள்ள மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காக இருக்கும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 

இது தொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று தூத்துக்குடியில், வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிகழ்வில் பங்கேற்றேன்.  நம் தூத்துக்குடியில், முதற்கட்டமாக ரூ. 4000  கோடி மதிப்பீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமையவிருக்கும் இந்த ஆலை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காக இருக்கும்.