×

தவெக அரசு அமைதி காப்பது எதனால்?- கனிமொழி

 

இன்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதோடு, தமிழ்நாட்டின் மரபில் இல்லாத வந்தே மாதரம் முதலாவதாக இசைக்கப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதற்கு முன்னர் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் இதேபோன்ற அவமதிப்பு நடந்தபோது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததோடு, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுத் தரப்பில் உத்தரவாதமும் அளிக்கப்பட்டது. ஆனால், இன்று மைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதோடு, தமிழ்நாட்டின் மரபில் இல்லாத வந்தே மாதரம் முதலாவதாக இசைக்கப்பட்டுள்ளது.