இதுதான் விஜய்யின் பாசமா?- கனிமொழி
Bro விஜய் ஆட்சியில் விலைவாசி நன்றாக உயர்கிறது. இதுதான் இந்த ஆட்சியின் ஒரே சாதனை என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
மதுராந்தகம் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய கனிமொழி எம்.பி, “பாரதிதாசன் என்ற மாணவர் கண்ணீர்விட்டுக் கூறிய பிறகுதான், கல்வி நிதியைக் கொடுக்கும் அளவிற்கு இந்த அரசுக்கு மனம் இருக்கிறது. "நீங்கள் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் கொடுப்போம்" என்று சொன்னார் நம் தலைவர். பிறகுதான் அந்த மாணவனுக்குக் கல்வி நிதியைக் கொடுத்தார்கள். நீங்கள் மக்களோடு இருக்கும் லட்சணத்தைத்தான் நாங்கள் மதுரையில் பார்த்தோமே. கரூர் வடு ஆறுவதற்குள் 15 பேர் மயங்கி விழுந்தார்கள். இந்தத் தவறுக்கு ஒரு மன்னிப்புக் கேட்க மனமில்லாத ஒருவர், மக்களுடன் இருப்பதைப் பற்றிப் பேசியிருக்கிறார். மக்களிடம் செல்லுங்கள், மக்களோடு இருங்கள்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை இன்று தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் பேசியிருக்கிறார். மக்களோடு இருப்பவர் கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது ஓடி ஒளிந்து இருக்கமாட்டார். நடுஇரவாக இருந்தாலும் ஓடிச் சென்று, 41 குடும்பங்களுக்கும் எங்கள் தலைவர் ஆறுதல் சொன்னதைப்போலச் சொல்லியிருப்பார். இன்றைக்கு ஓர் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார் நமது சுவீட் Bro விஜய். பா.ஜ.க.வின் இன்னொரு கிளை தான் த.வெ.க. என்ற உண்மையைச் சொன்ன விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள். ஏனென்றால், முதல்முறையாக உண்மையைப் பேசியிருக்கிறார்.
சினிமாவில் போராடுவதைப் போல, மக்களுக்காகப் போராடுவேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்த விஜய், நாம் எல்லாம் எதிர்த்த, பா.ஜ.க கொண்டுவந்த VB-G RAM G திட்டத்தை ஆதரித்தார். இத்திட்டத்தில் ஊதியம் கிடைக்காமல் மக்கள் இன்று அவதிப்படுகிறார்கள். இதுதான் விஜய் மக்கள் மீது வைத்துள்ள பாசம். Bro விஜய் ஆட்சியில் விலைவாசி நன்றாக உயர்கிறது. இதுதான் இந்த ஆட்சியின் ஒரே சாதனை” என்றார்.