பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்- தவெக அரசுக்கு கனிமொழி கேள்வி
முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள், புதிய தலைமைச்செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 21, 2026
அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?
முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம்… pic.twitter.com/iSE5PFNmqv
இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.