“பெண்களை காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்துவதுதான் தவெக சொன்ன மாற்றங்களில் ஒன்றா?”- கனிமொழி
சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டவர்களை பார்க்கச் சென்ற வள்ளி என்ற பெண்ணையும், அவரது மகன் திருமலையையும் காவல்துறையினர் தாக்கி லாக்கப்பில் அடைத்ததாகவும், இதைத் தட்டிக்கேட்ட வழக்கறிஞர் ஜெயந்தியை ஆண் காவலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தை வீடியோ எடுத்த வள்ளியின் மகள் மீனாவையும் தாக்கிய கொடூரமும் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது.
பெரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. பெண்களை காவல் நிலையத்திலேயே வைத்து இதுபோன்று துன்புறுத்துவது தான் தவெக சொன்ன மாற்றங்களில் ஒன்றா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.