இது தான் தவெக உறுதியளித்த பெண்கள் பாதுகாப்பா? - கனிமொழி
பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதை சுட்டிக்காட்டியுள்ள திமுக எம்பி கனிமொழி, “இது தான் தவெக உறுதியளித்த பெண்கள் பாதுகாப்பா? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு சிறை சென்ற தவெக நிர்வாகியை, அரசு விழாவிற்கு அழைத்து அழகுபார்ப்பது ஒருபுறம்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 5, 2026
பாலியல் வன்கொடுமை புகாரைத் திருப்பி பெறும்படி திருவைகுண்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் தவெக எம்.எல்.ஏ மறுபுறம்.
இது தான் தவெக உறுதியளித்த… https://t.co/4lr3nE8rHg
இதுதொடர்பாக திமுக எம்பி தனது எக்ஸ் தளத்தில், “ஆலந்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பாலியல் புகாரில் கைதான தவெகவின் பகுதி செயலாளராக இருந்த வேம்புலி பங்கேற்ற வீடியோ வெளியானது. பாலியல் புகாரில் கைதானதால் அவர் கட்சியில் இருந்து நீக்கி தவெக நடவடிக்கை எடுத்த நிலையில், அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த வேம்புலி, தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, “பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு சிறை சென்ற தவெக நிர்வாகியை, அரசு விழாவிற்கு அழைத்து அழகுபார்ப்பது ஒருபுறம். பாலியல் வன்கொடுமை புகாரைத் திருப்பி பெறும்படி திருவைகுண்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் தவெக எம்.எல்.ஏ மறுபுறம். இது தான் தவெக உறுதியளித்த பெண்கள் பாதுகாப்பா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.