×

ஓபிஎஸ் உடன் கூட்டணியா?- கனிமொழி பேட்டி

 

தேர்தல் வந்துவிட்டால் பிஜேபி ICE பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். இன்கம் டேக்ஸ், சிபிஐ அதேபோல் இடி அதனால் அந்த வேலையை தமிழ்நாட்டிலும் தொடங்கியிருக்கிறார்கள் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 76 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய இருசக்கர வாகனங்களை கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினார்கள். தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 76 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றித்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார்கள்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கருணாநிதி எம்பி, “வேலூருக்கு செல்ல வேண்டிய பணி இருக்கிறது. அந்த பணி முடிந்த பிறகு விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் முதலமைச்சர் வெளியிடுவார். கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை எப்போதும் சுமுகமாக தான் இருந்திருக்கிறது. ஏனென்றால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய உறவு. அதோடு கொள்கைக்காக உருவாகியிருக்கக்கூடிய கூட்டணி இது. அதனால் நிச்சயமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்கும். நான் பலமுறை உங்களுக்கே சொல்லி இருக்கிறேன். தேர்தல் வந்துவிட்டால் பிஜேபி ஐஸ் என பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் இன்கம் டேக்ஸ் , சிபிஐ அதேபோல் இடி அதனால் அந்த வேலையை தமிழ்நாட்டிலும் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் தான் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.